Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வெளிமாநிலத்தில் சிக்கி தவித்த தமிழர்கள் சிறப்பு ரயிலில் திருச்சி வந்தடைந்தனர்

வெளிமாநிலத்தில் சிக்கி தவித்த தமிழர்கள் சிறப்பு ரயிலில் திருச்சி வந்தடைந்தனர்

By: Nagaraj Sun, 10 May 2020 4:57:34 PM

வெளிமாநிலத்தில் சிக்கி தவித்த தமிழர்கள் சிறப்பு ரயிலில் திருச்சி வந்தடைந்தனர்

வெளிமாநிலத்தில் சிக்கி தவித்த தமிழர்கள் சிறப்பு ரயில் வாயிலாக இன்று திருச்சி வந்து சேர்ந்தனர்.

நாடு முழுவதும் புலம் பெயர்ந்து, வெளி மாநிலங்களில் வேலை செய்யும் தொழிலாளர்கள்,அந்தந்த மாநிலத்தில் உள்ள சொந்த ஊருக்கு, சிறப்பு ரயில் மூலம் அனுப்பி வைக்கப்படுவர் என்று மத்திய மாநில அரசுகள் அறிவித்திருந்தன. அதன்படி, மஹாராஷ்ட்டிரா மாநிலம் சோலாப்பூரில் பணி புரிந்த தமிழகத்தை சேர்ந்த 962 பேர், சொந்த ஊருக்கு திரும்ப வேண்டும் என்று பதிவு செய்திருந்தனர்.


outsourcing,workers,trapped,special train,visit to trichy ,வெளிமாநிலம், தொழிலாளர்கள், சிக்கி தவிப்பு, சிறப்பு ரயில், திருச்சி வருகை

நேற்று மதியம் 2 மணிக்கு சோலாப்பூரில் இருந்து, 22 கோச்களுடன் புறப்பட்ட சிறப்பு ரயில் அவர்கள் அழைத்து வரப்பட்டனர்.அதன்படி, விழுப்புரம் 79, கள்ளக்குறிச்சி 1, நெல்லை 62, திருவண்ணாமலை 57, மதுரை 55, கடலுார் 52, காஞ்சிபுரம் 50, சேலம் 49, நாமக்கல் 14, தஞ்சாவூர் 41, ராமநாதபுரம் 38, கன்னியாகுமரி 37, விருதுநகர் 33, சிவகங்கை 30, திருச்சி 29.

திண்டுக்கல் 28, திருவள்ளூர் 27, திருப்பத்துார் 27, வேலுார் 26, அரியலுார் 24, புதுக்கோட்டை 24, கோயம்புத்துார் 22, ஈரோடு 9, கரூர் 7, திருப்பூர் 1, தேனி 22, திருவாரூர் 21, நாகபட்டினம் 17, தர்மபுரி 16, கிருஷ்ணகிரி 14, துாத்துக்குடி 16, நீலகிரி 13, பெரம்பலுார் 11, சென்னை 10 ஆகிய 34 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பகல் 11.52 மணிக்கு திருச்சி ஜங்ஷனுக்கு வந்து சேர்ந்தனர்.

outsourcing,workers,trapped,special train,visit to trichy ,வெளிமாநிலம், தொழிலாளர்கள், சிக்கி தவிப்பு, சிறப்பு ரயில், திருச்சி வருகை

அவர்களுக்கு, மாவட்ட நிர்வாகத்தின் மூலம் உணவு, குடிநீர், முகக்கவசம் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும், மாவட்ட நிர்வாகத்தின் மூலம் ஏற்பாடு செய்திருந்த 30 அரசு பஸ்களில் சமூக இடைவெளியை கடைபிடித்து, அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை, மாவட்ட கலெக்டர் சிவராசு தலைமையிலான அதிகாரிகள் செய்திருந்தனர்.

Tags :