Advertisement

நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு

By: vaithegi Mon, 11 July 2022 5:43:08 PM

நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு

இந்தியா: இந்தியாவில் மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய அளவில் நுழைவுத்தேர்வு நடைபெற்று கொண்டு வருகிறது. ஆண்டுதோறும் தேசிய தேர்வு முகமை இந்த நீட் தேர்வை நடத்தி வருகிறது. தற்போது இந்தியாவில் மருத்துவம் படிக்க விரும்புவோர் கட்டாயம் நீட் தேர்வு எழுத வேண்டும்.

இதையொட்டி நடப்பாண்டு நீட் தேர்வு ஜூலை 17ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்ப பதிவுகள் கடந்த ஏப்ரல் மாதம் முதல் மே மாதம் வரை நடைபெற்றது. நாடு முழுவதும் சுமார் 18.72 லட்சம் பேர் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். இத்தேர்வானது இந்தியாவில் 546 நகரங்களிலும் அதை தவிர்த்து வெளியே 14 நகரங்களிலும் நடைபெற உள்ளதாக NAT தெரிவித்துள்ளது.

மேலும் இந்தாண்டு உருது, ஆங்கிலம், இந்தி, மராத்தி, அஸ்ஸாமி, ஒடியா, குஜராத்தி, பெங்காலி, பஞ்சாபி, தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட 13 மொழிகளில் இளநிலை நீட் தேர்வு நடைபெற உள்ளது.

hall ticket,neet exam ,ஹால் டிக்கெட் ,நீட் தேர்வு

இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் ஆகிய பாடங்களில் இருந்து வினாக்கள் கேட்கப்படும். பிரிவு A யில் 35 கேள்விகள் கேட்கப்படும். பிரிவு B 15 கேள்விகள் கேட்கப்படும். அதில் விண்ணப்பதாரர்கள் ஏதேனும் 10 கேள்விகளைத் தேர்வு செய்யலாம்.இந்தியாவில் ஜூலை 17ம் தேதி இளநிலை நீட் தேர்வு நடைபெற உள்ளது. இதையடுத்து இன்று நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியாகி உள்ளது.

ஹால் டிக்கெட்டை இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்ய முதலில் https://neet.nta.nic.in/ என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். அதில் ADMIT CARD NEET (UG) என்பதை கிளிக் செய்யவும். அதில் பயனர் ஐ.டி மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்டு உள்நுழையவும். அதில் உங்களது ஹால் டிக்கெட் காண்பிக்கப்படும். அதை டவுன்லோட் செய்து கொள்ளலாம். ஒருவேளை விண்ணப்பதாரர்கள் ஹால் டிக்கெட் டவுன்லோட் செய்வதில் ஏதேனும் சிரமம் ஏற்பட்டால் 011-40759000 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு சந்தேகங்களை அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :