Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஹமாஸ் விடுவித்தது 51 பணய கைதிகள்... இஸ்ரேல் 153 பேரை விடுவித்தது

ஹமாஸ் விடுவித்தது 51 பணய கைதிகள்... இஸ்ரேல் 153 பேரை விடுவித்தது

By: Nagaraj Wed, 29 Nov 2023 11:18:59 PM

ஹமாஸ் விடுவித்தது 51 பணய கைதிகள்... இஸ்ரேல் 153 பேரை விடுவித்தது

காசா: 4 நாள் போர் நிறுத்தத்தில் ஹமாஸ் மொத்தமாக 51 பணய கைதிகளையும், இஸ்ரேல் 153 பாலஸ்தீன கைதிகளையும் விடுதலை செய்தது.

பாலஸ்தீனத்தின் காசா பகுதியை சேர்ந்த ஹமாஸ் அமைப்பினர் கடந்த மாதம் 7-ந்தேதி இஸ்ரேல் மீது ராக்கெட் குண்டுகளை வீசியும், அந்த நாட்டுக்குள் ஊடுருவியும் நடத்திய கொடூர தாக்குதலில் சுமார் 1,200 பேர் பலியாகினர்.

அதோடு பெண்கள், சிறுவர்கள் உள்பட 240 பேரை பணய கைதிகளாக பிடித்து காசாவுக்கு இழுத்து சென்றனர். அதனை தொடர்ந்து, காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. ஹமாஸ் அமைப்பை அடியோடு ஒழிப்போம் என சூளுரைத்த இஸ்ரேல் காசாவை முற்றுகையிட்டு தரை, கடல், வான் என மும்முனை தாக்குதலை நடத்தியது. இதில் காசா நகரம் உருக்குலைந்து போனதுடன் 14 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொன்று குவிக்கப்பட்டனர்.

அதோடு 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் படுகாயம், பல லட்சம் பேர் வீடுகளை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் தஞ்சம், உணவு, குடிநீர் போன்ற அடிப்படை தேவைகளுக்கு தட்டுப்பாடு என போரின் துயரம் நீண்டது.

pows,israel,border,victory,ceasefire ,பயணக்கைதிகள், இஸ்ரேலியா, எல்லை, வெற்றிகரம், போர்நிறுத்தம்

இதனால் கவலை கொண்ட சர்வதேச சமூகம் உடனடி போர் நிறுத்தத்தை வலியுறுத்தியதால் போர் நிறுத்தப்பட்டது. இதனையடுத்து 4 நாள் போர் நிறுத்தம் கடந்த 24-ந்தேதி தொடங்கியது. இந்த காலக்கட்டத்தில்இரு தரப்பிலும் பணய கைதிகள் விடுவிக்கப்பட்டு வருகிறார்கள்.

அந்த வகையில் 3 நாட்களில் ஹமாஸ் 40 பணய கைதிகளையும், இஸ்ரேல் 120 சிறை கைதிகளையும் விடுதலை செய்திருந்தன. இதனிடையே இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் நிறுத்தம் நேற்று முன்தினம் முடிவுக்கு வந்தது. அதேவேளையில் இருதரப்பும் எந்தவித விதிமீறல்களிலும் ஈடுபடாமல் 4 நாள் போர் நிறுத்தம் முறையாக கடைபிடித்ததாலும், பணய கைதிகள் மற்றும் பாலஸ்தீன சிறை கைதிகள் விடுவிப்பு சுமுகமாக நடந்ததாலும் போர் நிறுத்தத்தை மேலும் நீட்டிக்க சர்வதேச நாடுகள் அழுத்தம் கொடுத்தன.

அதன்படி போர் நிறுத்தத்தை மேலும் 2 நாட்களுக்கு நீட்டிக்க இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் சம்மதம் தெரிவித்தன. இந்நிலையில் நீட்டிக்கப்பட்ட 2 நாள் போர் நிறுத்தம் உள்ளூர் நேரப்படி நேற்று காலை 7 மணிக்கு அமலுக்கு வந்தது. இந்த 2 நாள் போர் நிறுத்தத்தில் கூடுதலாக பணய கைதிகள் மற்றும் பாலஸ்தீன சிறை கைதிகளை விடுவிக்க இருதரப்பும் முடிவு செய்துள்ளன.

முன்னதாக 4 நாள் போர் நிறுத்தத்தின் கடைசி நாளான நேற்று முன்தினம் 11 பணய கைதிகளை ஹமாஸ் விடுவித்தது. அதற்கு ஈடாக 33 பாலஸ்தீன சிறை கைதிகளை இஸ்ரேல் விடுதலை செய்தது. விடுவிக்கப்பட்ட பணய கைதிகள் இஸ்ரேலுக்கு அழைத்துவரப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் குடும்பத்தினருடன் இணைந்தனர்.

4 நாள் போர் நிறுத்தத்தில் ஹமாஸ் மொத்தமாக 51 பணய கைதிகளையும், இஸ்ரேல் 153 பாலஸ்தீன கைதிகளையும் விடுதலை செய்தது. காசா போர் நிறுத்தம் ஐந்தாவது நாளாக நடைபெற்று வரும் நிலையில், 10 இஸ்ரேலியர்கள் மற்றும் இரண்டு வெளிநாட்டு பிரஜைகள் உட்பட மேலும் 12 பணயக்கைதிகளை ஹமாஸ் விடுவித்துள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் (ICRC) உறுதிப்படுத்தியுள்ளது.

இஸ்ரேல்-ஹமாஸ் இடையே நீட்டிக்கப்பட்ட ஆறு நாள் போர்நிறுத்தத்தின் ஐந்தாவது நாளான நேற்று எகிப்துடனான ரபா கிராசிங் வழியாக காசாவில் இருந்து 12 பணயக்கைதிகளை விடுவிக்கவும் மாற்றவும் வெற்றிகரமாக உதவியது என்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும் விடுவிக்கப்பட்ட பணயக் கைதிகள் இஸ்ரேலிய எல்லைக்குள் உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|
|
|