Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கர்நாடக மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி! ஊரடங்கில் புதிய தளர்வுகளை அறிவித்தார் முதல்வர் எடியூரப்பா

கர்நாடக மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி! ஊரடங்கில் புதிய தளர்வுகளை அறிவித்தார் முதல்வர் எடியூரப்பா

By: Monisha Mon, 18 May 2020 6:09:17 PM

கர்நாடக மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி! ஊரடங்கில் புதிய தளர்வுகளை அறிவித்தார் முதல்வர் எடியூரப்பா

கர்நாடக மாநிலத்தில் 4ம் கட்ட ஊரடங்கு தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் விதிமுறைகள் தளர்வு தொடர்பாக முதல்வர் எடியூரப்பா தலைமையில் அமைச்சர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு பிறகு பேசிய முதல்வர் எடியூரப்பா, கர்நாடக மாநிலத்தில் கொரோனா பாதிப்பு இல்லாத இடங்களில், அரசு போக்குவரத்து கழக பேருந்துகள், டாக்சி, ஆட்டோ உள்ளிட்ட பொது போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்படும் என அறிவித்தார். மேலும் பல்வேறு தளர்வுகளை அவர் அறிவித்துள்ளார் அதின் விபரம் வருமாறு:-

chief minister yeddyurappa,karnataka,new relaxation on curfew,bus,night curfew ,முதல்வர் எடியூரப்பா, கர்நாடகா, ஊரடங்கில் புதிய தளர்வுகள்,பேருந்து,இரவு ஊரடங்கு

‘பேருந்துகளில் 30 பேர் மட்டுமே பயணிக்க வேண்டும். அனைவரும் மாஸ்க் கண்டிப்பாக அணிந்திருப்பதுடன், தனி மனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். ரெயில்கள் மாநிலங்களுக்குள் மட்டும் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா, குஜராத், தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் கர்நாடகாவில் நுழைய தடை விதிக்கப்படுகிறது.

திரையரங்குகள், மால்கள் தவிர அனைத்து கடைகள் மற்றும் வணிக வளாகங்களும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், மாநிலத்தில் ஞாயிற்றுக் கிழமை மட்டும் முழு ஊரடங்கு பின்பற்றப்படும். டாக்சிகள், ஆட்டோ மற்றும் கேப்களுக்கு, டிரைவருடன் அதிகபட்சம் இரண்டு பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள். சலூன்கள் மற்றும் அழகு நிலையங்களை திறக்கலாம்.

chief minister yeddyurappa,karnataka,new relaxation on curfew,bus,night curfew ,முதல்வர் எடியூரப்பா, கர்நாடகா, ஊரடங்கில் புதிய தளர்வுகள்,பேருந்து,இரவு ஊரடங்கு

பூங்காக்கள் காலை 7 மணி முதல் காலை 9 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறக்கலாம். இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரையிலான இரவு ஊரடங்கு உத்தரவு தொடரும். நாளை முதல் இந்த புதிய தளர்வுகள் நடைமுறைக்கு வருகின்றன’ என்றும் எடியூரப்பா கூறினார்.

Tags :
|