Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நெட்பிளிக்ஸ் தளத்தில் வெப் தொடர்களை தயாரித்து வழங்க ஹாரி, மேகன் தம்பதியர் பல்லாண்டு கால ஒப்பந்தம்

நெட்பிளிக்ஸ் தளத்தில் வெப் தொடர்களை தயாரித்து வழங்க ஹாரி, மேகன் தம்பதியர் பல்லாண்டு கால ஒப்பந்தம்

By: Karunakaran Fri, 04 Sept 2020 1:49:17 PM

நெட்பிளிக்ஸ் தளத்தில் வெப் தொடர்களை தயாரித்து வழங்க ஹாரி, மேகன் தம்பதியர் பல்லாண்டு கால ஒப்பந்தம்

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ், டயானா தம்பதியரின் இளைய மகன் இளவரசர் ஹாரி. இவரது மனைவி மேகன். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அரச கடமைகளில் இருந்து ஹாரி விலகி, தனது மனைவி மேகன், குழந்தை ஆர்ச்சியுடன் அமெரிக்காவில் தெற்கு கலிபோர்னியாவில் குடியேறினார். தற்போது, நெட்பிளிக்ஸ் தளத்தில் வெப் தொடர்களை தயாரித்து வழங்குவதற்கு பல்லாண்டு கால ஒப்பந்தம் ஒன்றில் ஹாரி, மேகன் தம்பதியர் கையெழுத்திட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி, குழந்தைகள் நிகழ்ச்சிகள் தொடங்கி பல வகையான ‘வெப்’தொடர்களை தயாரித்து வழங்குவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த தம்பதியர் வெளியிட்ட அறிக்கையில், எங்கள் கவனமெல்லாம் வழங்க உள்ள தொடர்களின் உள்ளடக்கத்தை உருவாக்குவதில் இருக்கும். இது நம்பிக்கை அளிப்பதாக அமைந்துள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

harry,megan,web series,netflix ,ஹாரி, மேகன், வலைத் தொடர், நெட்ஃபிக்ஸ்

புதிய பெற்றோராக உற்சாகமான குடும்ப நிகழ்ச்சிகளை உருவாக்கித்தருவது எங்களுக்கு முக்கியமாக உள்ளது என ஹாரி, மேகன் தம்பதியர் தெரிவித்துள்ளனர். இருப்பினும், நெட்பிளிக்சுடன் ஹாரி, மேகன் தம்பதியர் செய்துள்ள ஒப்பந்தத்தின் மதிப்பு விவரம் வெளியிடப்படவில்லை.

மேலும் இது அவர்கள் வாழ்க்கையில் சம்பளம் பெறும் வேலையில் ஈடுபடுவதற்கான மிகப்பெரிய படியாக அமையும் என கூறப்படுகிறது. மேகன் முன்னாள் நடிகையாக இருந்தாலும் கூட வெப் தொடர்களில் நடிக்க மாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Tags :
|
|