Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அசாமில் அறுவடை திருவிழா: பிரமாண்ட நடன நிகழ்ச்சியை கண்டு ரசித்த மக்கள்

அசாமில் அறுவடை திருவிழா: பிரமாண்ட நடன நிகழ்ச்சியை கண்டு ரசித்த மக்கள்

By: Nagaraj Mon, 09 Oct 2023 5:39:41 PM

அசாமில் அறுவடை திருவிழா: பிரமாண்ட நடன நிகழ்ச்சியை கண்டு ரசித்த மக்கள்

திஸ்பூர்: அசாமில் அறுவடை திருவிழாவையொட்டி நடந்த பிரமாண்ட நடன நிகழ்ச்சி பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது.

நம் ஊர்களில் பொங்கல் திருநாளை அறுவடை நாளாகக் கொண்டாடும் வேளையில், ஜார்கண்ட், பீகார், மத்தியப் பிரதேசம், அசாம் உள்ளிட்ட மாவட்டங்களில் கரம் பூஜை என்ற பெயரில் அறுவடைத் திருவிழா கொண்டாடப்படுகிறது.

அதன்படி அசாம் மாநிலம் விஸ்வநாத் மாவட்டத்தில் கரம்பூஜை விழா வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. பெண்கள் தங்களது பாரம்பரிய உடைகளை அணிந்து கொண்டு ஊர்வலமாக நடனமாடியது பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது.

grand dance,occasion,performance ,அறுவடைத் திருவிழா, ஜார்கண்ட், நடன நிகழ்ச்சி

பின்னர் ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் மைதானத்தில் திரண்டு தங்கள் பாரம்பரிய நடன நிகழ்வைத் தொடங்கினர். மேள, தாள வாத்தியங்கள் முழங்க அவர்கள் நடனமாடிய காட்சி பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது.

விஸ்வநாத் மாவட்டம் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர்.

Tags :