ஹவாய் தீவிலுள்ள கிளாயுவா எரிமலை வெடிக்க தொடங்கியது
By: Nagaraj Thu, 08 June 2023 7:54:08 PM
அமெரிக்கா: அமெரிக்காவின் ஹவாய் தீவிலுள்ள கிளாயுவா எரிமலை வெடித்து சிதறத் தொடங்கியுள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அமெரிக்காவின் ஹவாய் தீவிலுள்ள கிளாயுவா எரிமலை வெடித்து சிதறி நெருப்பு குழம்பை கக்கி வருகிறது.
உலகில் எந்நேரமும் சீற்றத்துடன் காணப்படும் எரிமலைகளில் கிளாயுவா எரிமலையும் ஒன்றாகும். 2019ம் ஆண்டு அந்த எரிமலை வெடித்தபோது, ஏராளமான வீடுகள் பலத்த சேதமடைந்தன.
கடைசியாக கடந்த ஜனவரி மாதம் கிளாயுவா எரிமலை வெடித்து சிதறியது. அதன்பிறகு சீற்றம் தணிந்து காணப்பட்ட எரிமலை மீண்டும் தற்போது வெடித்து சிதறி வருகிறது. இதனால் எரிமலை இருக்கும் பகுதி தீப்பிழம்பாக காட்சியளிக்கிறது.
Tags :
volcano |
january |
flame |