அண்ணாமலை ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்தார்
By: vaithegi Sun, 21 May 2023 11:40:10 AM
சென்னையில் பாஜக தலைவர் அண்ணாமலை ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து மனு அளிப்பு ... சென்னை கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் மற்றும் பாஜகவினர் இணைந்து ஆளுநரை சந்தித்து மனு அளித்து உள்ளனர். அவர்கள் அளித்த மனுவில் தமிழகத்தில் கள்ளச்சாராயத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்க கோரியிருந்தனர்.
மேலும், ஆளுநர் நேரடியாக தலையிட்டு மதுபானம் தொடர்பான பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் பாஜக குழு கோரிக்கை வைத்து உள்ளது.
கள்ளச்சாராய விவகாரத்தில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கத் தவறினால், தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தவும் பாஜக தயங்காது என்று அண்ணாமலை கூறியிருந்த நிலையில் தற்பொழுது ஆளுநரை சந்தித்து மனு அளித்து உள்ளார்.
இதையடுத்து செந்தில்பாலாஜியை பதவியில் இருந்து நீக்க முதல்வருக்கு ஆளுநர் உத்தரவிடக் கோரியும் மனு அளித்துள்ளனர். முன்னதாக, செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என அண்ணாமலை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்துள்ளார்.