Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மாநில பிரச்னைகளை பற்றி பேசாமல் என்னை பற்றி மட்டுமே பேசுகிறார்... பிரதமர் மீது ராகுல் குற்றச்சாட்டு

மாநில பிரச்னைகளை பற்றி பேசாமல் என்னை பற்றி மட்டுமே பேசுகிறார்... பிரதமர் மீது ராகுல் குற்றச்சாட்டு

By: Nagaraj Wed, 03 May 2023 11:54:19 PM

மாநில பிரச்னைகளை பற்றி பேசாமல் என்னை பற்றி மட்டுமே பேசுகிறார்... பிரதமர் மீது ராகுல் குற்றச்சாட்டு

கர்நாடகா: மாநிலத்தின் பிரச்னைகளைப் பற்றி பேசாமல், என்னைப் பற்றி மட்டுமே பிரதமர் மோடி பேசுகிறார் என்று ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

தேர்தல் பிரசாரத்தின் போது பாஜக மாநில தலைவர்களை விட, பிரதமர் நரேந்திர மோடி தன்னை பற்றி அதிகம் பேசியதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி சிக்மகளூரில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, மாநிலத்தின் பிரச்னைகளைப் பற்றி பேசாமல், தன்னைப் பற்றி மட்டுமே பிரதமர் பேசுவதாக கூறினார்.

பரப்புரையின் போது, 70 சதவீதம் தன்னைப் பற்றியும், 30 சதவீதம் மாநிலத்தைப் பற்றியும் பிரதமர் பேசுவதாக விமர்சித்தார். மாநில தலைவர்களைப் பற்றி குறிப்பிட்டு காங்கிரஸ் கட்சி வாக்குச் சேகரிக்கும் போது, முதலமைச்சர் பசவராஜ் பொம்மை மற்றும் எடியூரப்பா பெயர்களைக் கூட பிரதமர் உச்சரிக்கவில்லை என ராகுல் காந்தி கூறினார்.

prime minister,rahul gandhi,review,state, ,பிரதமர், மாநிலம், ராகுல் காந்தி, விமர்சனம்

மேலும், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, கர்நாடகாவின் சிந்தாமணியில் வாக்கு சேகரிக்கும் போது வாகனத்தில் இருந்து கீழே இறங்கினார். பிரியங்கா துப்புரவுத் தொழிலாளியான ராணியை பிரச்சார வாகனத்தில் ஏற்றிக்கொண்டு வாக்கு சேகரித்தார்.

ஊழல், பணவீக்கம், வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற மக்கள் பிரச்னைகளை பழைய பிரச்னைகளை பேசாமல், மோதலை தூண்டாமல் பேசி தேர்தலை சந்திக்க வேண்டும் என்று பிரதமர் உள்ளிட்ட பாஜகவுக்கு பிரியங்கா காந்தி சவால் விடுத்தார்.

பின்னர் பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்கள் பிரச்சனைகள் குறித்து பிரதமர் மோடி பேசவில்லை என கடுமையாக சாடினார். கடந்த மூன்றரை ஆண்டுகளில் கர்நாடகாவில் எவ்வளவு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது என்று கேள்வி எழுப்பினார். பின்னர், பெங்களூரு ஹோஸ்கோட், சி.வி.ராமன் நகர் ஆகிய இடங்களில் உற்சாகமாக கைதட்டி வாக்கு சேகரித்தார்.

இதனிடையே, புலிகேசி நகர் தொகுதியில் அதிமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டு வாபஸ் பெற்ற கர்நாடக மாநில அதிமுக செயலாளர் குமார் மற்றும் அன்பரசன் ஆகியோர் பெங்களூருவில் கர்நாடக தேர்தல் அதிகாரி அண்ணாமலையை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். கர்நாடகா தேர்தல் ஒரே கட்டமாக மே 10ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை மே 13ஆம் தேதியும் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|