Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கோவிட் தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய கனடா சுகாதார அமைச்சு தீர்மானம்

கோவிட் தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய கனடா சுகாதார அமைச்சு தீர்மானம்

By: Nagaraj Fri, 02 Sept 2022 4:38:06 PM

கோவிட் தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய கனடா சுகாதார அமைச்சு தீர்மானம்

கனடா: தடுப்பூசிகள் கொள்வனவு செய்ய தீர்மானம்... கனடிய சுகாதார அமைச்சு பெருந்தொகை கோவிட் தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய தீர்மானித்துள்ளது

ஒமிக்ரோன் திரிபு மற்றும் அதன் உப திரிபுகளை கட்டுப்படுத்தக்கூடிய புதிய கோவிட் தடுப்பூசி ஒன்று இவ்வாறு கொள்வனவு செய்யப்படவுள்ளது. இன்றைய தினம் சுமார் 8 லட்சம் மடர்னா கோவிட் தடுப்பூசிகள் கனடாவை வந்தடையும் என சுகாதார அமைச்சர் ஜியான் யுவிஎஸ் டக்ளஸ் தெரிவித்துள்ளார்.

omicron strain,vaccine,approval,purchase,government,canada ,ஒமிக்ரான் திரிபு, தடுப்பூசி, அனுமதி, கொள்வனவு, அரசாங்கம், கனடா

இந்த மாத இறுதிக்குள் 10 தசம் ஐந்து மில்லியன் தடுப்பூசிகள் இறக்குமதி செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பூஸ்டர் தடுப்பூசியாக இந்த மடர்னா தடுப்பூசி ஏற்றப்பட உள்ளது. கனடாவில் 60 விதமான வயதுக்கு வந்தவர்கள் மூன்று கோவிட் தடுப்பூசிகளை ஏற்றுக் கொண்டுள்ளனர் ஏனைய ஜி 7 நாடுகளுடன் ஒப்பீடு செய்யும் போது கனடா பின்னடைவை எதிர்நோக்கியுள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஏனைய ஜி 7 நாடுகளில் சுமார் 90 வீதமான ஜனத்தொகையினர் மூன்று தடுப்பூசிகளை ஏற்றிக் கொண்டுள்ளனர். ஒமிக்ரான் திரிபினை கட்டுப்படுத்தக் கூடிய இந்த புதிய தடுப்பூசிக்கு அண்மையில் கனடா அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tags :