கொரோனாவில் இருந்து மீண்டவர்களில் சிலருக்கு உடல் நல பாதிப்பு
By: Nagaraj Sun, 16 Aug 2020 10:07:33 AM
கொரோனா சிகிச்சை பெற்று சென்றவர்களுக்கு இதய பிரச்னை உட்பட உடல் நலக்கோளாறுகள் ஏற்படுவதாக வெளியாகி உள்ள தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனாவில் இருந்து குணமாகி சென்றவர்களை கண்காணிக்க தனி மையங்கள் அமைக்கப்படும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தொற்றிலிருந்து குணமாகிச் சென்ற பலரும் மீண்டும் உடல்நலப் பிரச்னைகள் இருப்பதாக கூறுகிறார்கள் என்பதால், தனி மையம் அமைக்கப்பட உள்ளது. குணமான 80 சதவீதம் பேருக்கு எந்தப்பிரச்னையும் வருவதில்லை.
சிலருக்கு இதய பிரச்னை, நிமோனியா, ரத்தம் கட்டுதல், பக்கவாதம் உள்ளிட்ட
பிரச்னைகள் ஏற்படுவதாக தெரிய வந்திருக்கிறது என்று ராதாகிருஷ்ணன்
கூறியுள்ளார்.
எனவே குணமாகிச் சென்றவர்களை கண்காணிக்க சென்னை
ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஒரு மையம் தொடங்கப்படும் என்றும்,
இதுபோன்று தமிழகம் முழுவதும் ஏற்படுத்த திட்டம் இருப்பதாகவும் அவர் கூறி
இருக்கிறார்.