சுகாதாரத்துறை விடுத்துள்ள எச்சரிக்கை: நிபா வைரஸ் பரவல் அதிகரிப்பு
By: Nagaraj Sun, 17 Sept 2023 07:21:29 AM
சென்னை: கேரளா மாநிலத்தில் கடந்த சில வாரங்களாகவே நிஃபா வைரஸ் தீவிரமாக பரவி கொண்டு வருகிறது. அதிலும், குறிப்பாக கடந்த 2 நாட்களாகவே நிஃபா வைரஸ் பரவலால் உயிரிழப்புகளும் அதிகரித்து உள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
மேலும், இந்த தொற்று கொரோனாவை விட கொடியதாக மூச்சு காற்று, வியர்வை மூலமாகவும் பரவுவதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.இந்த நிலையில், நிஃபா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் வியர்வை, ரத்தம், உமிழ்நீர் ஆகியவற்றை தொடக்கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து நிஃபா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்கும்படியும், நோயாளி தொடர்புடையவர்களையும் தனிமைப்படுத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
மேலும் இது மட்டுமல்லாமல், வீட்டை விட்டு வெளியேறும் போது கட்டாயமாக பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டும். வவ்வாலிருந்து தான் நிஃபா வைரஸ் பரவுகிறது என்பதால் பொதுமக்கள் வவ்வால்களை அச்சறுத்தி அதனை பறக்க செய்ய வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.