Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஆந்திராவில் கொரோனா நோயாளிகள் 236 பேரை காணவில்லை என சுகாதாரத்துறை புகார்

ஆந்திராவில் கொரோனா நோயாளிகள் 236 பேரை காணவில்லை என சுகாதாரத்துறை புகார்

By: Nagaraj Sat, 25 July 2020 11:23:33 AM

ஆந்திராவில் கொரோனா நோயாளிகள் 236 பேரை காணவில்லை என சுகாதாரத்துறை புகார்

கொரோனா பாதித்த நோயாளிகள் 236 பேரை காணவில்லை என ஆந்திரா சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கடந்த சில நாட்களாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவாக உயர்ந்து கொண்டிருக்கிறது. கொரோனா தொற்றை சமாளிக்க மத்திய , மாநில அரசுகள் தீவிர முயற்சிகள் எடுத்து வருகின்றன.

236 people,corona,patients,missing,health department ,236 பேர், கொரோனா, நோயாளிகள், காணவில்லை, சுகாதாரத்துறை

ஆந்திர மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு கூடிக் கொண்டே உள்ளது. அதிலும் திருப்பதி நகராட்சியில் மட்டும் 2300 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது. இந்நிலையில் அதில் கொரோனா பாதித்த 236 பேரை காணவில்லை என சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கொரோனா பரிசோதனை மேற்கொண்ட அவர்கள் அனைவரும் தவறான தகவல்களை கொடுத்துள்ளதாகவும் தலைமறைவானதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக சித்தூர் மாவட்ட ஆட்சியர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். கொரோனா பாதித்த 66 பெண்கள் உட்பட 236 பேரை காணவில்லை என அவர் அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

Tags :
|