Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னையில் அதிக அளவில் கொரோனா பரவி வருவதால் எச்சரிக்கையாக இருக்கும்படி சுகாதாரத்துறை அமைச்சர் அறிவுப்பு

சென்னையில் அதிக அளவில் கொரோனா பரவி வருவதால் எச்சரிக்கையாக இருக்கும்படி சுகாதாரத்துறை அமைச்சர் அறிவுப்பு

By: vaithegi Tue, 28 June 2022 5:58:20 PM

சென்னையில்  அதிக அளவில் கொரோனா பரவி வருவதால் எச்சரிக்கையாக இருக்கும்படி சுகாதாரத்துறை அமைச்சர் அறிவுப்பு

சென்னை: தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவலின் தாக்கம் நாளுக்கு நாள் உயந்து கொண்டு வருகிறது. இதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டும் கூட தொற்றின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிக் கொண்டுதான் இருக்கிறது.

பெரும்பாலும் பொது இடங்களுக்கு செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டுமெனவும், அவசியம் இல்லாமல் பொது இடங்களுக்கு செல்ல வேண்டாம் எனவும், அப்படி பொது இடங்களுக்கு செல்ல நேரிடும் சமயங்களில் முகக் கவசம் கட்டாயம் அணிந்து செல்லும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பொது இடங்களில் சமூக இடைவெளியை முடிந்த அளவுக்கு பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

ஆனால் அரசின் எந்த நடவடிக்கைகளையும் மக்கள் பின்பற்றாமல் அலட்சியமாக இருந்து வருகின்றனர். மக்களின் அலட்சியத்தின் காரணத்தினால் தான் தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் துவங்கியுள்ளது.

corona,minister of health ,கொரோனா ,சுகாதாரத்துறை அமைச்சர்

கொரோனா பரவுவதை கருத்தில் கொண்டு முடிந்த வரைக்கும் அனைத்து கட்டுப்பாடுகளையும் கடைப்பிடிக்கும்படி சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். இருப்பினும், தமிழகத்திலேயே சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் தான் அதிகளவில் கொரோனா பரவிக்கொண்டிருக்கிறது.

இதனால் சென்னை மற்றும் திருவள்ளூர் மக்களை எச்சரிக்கையாக இருக்கும்படியும், அரசு அறிவித்துள்ள கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றும்படியும் சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியின் எச்சரித்துள்ளார்.

மேலும், கொரோனா தடுப்பூசி இரண்டு தவணைகளையும் செலுத்தி கொள்ளாதவர்கள் கட்டாயமாக செலுத்தி கொள்ளும்படியும் அறிவுறுத்தியுள்ளார். மேலும், மாஸ்க் அணியாமல் பொது இடங்களுக்கு செல்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என அறிவித்துள்ளார்.

Tags :
|