Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • செந்தில் பாலாஜி விவகாரத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனு மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை

செந்தில் பாலாஜி விவகாரத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனு மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை

By: vaithegi Thu, 22 June 2023 11:17:07 AM

செந்தில் பாலாஜி விவகாரத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனு மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை

சென்னை: அமலாக்கத்துறையால் சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்படவே அவர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதனையடுத்து அவருக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக சென்னை ஆழ்வார்பேட்டையில் அமைந்துள்ள காவிரி மருத்துவமனைக்கு அவரை மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. செந்தில் பாலாஜி காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

இதற்கு இடையே தனியார் மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி அளித்து உயர்நீதிமன்ற பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக , அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. செந்தில் பாலாஜியின் மனைவி மேகலாவும் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுக்கள் மீதான விசாரணை நேற்று நீதிபதிகள் சூரியகாந்தி, எம்.எம். சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்றது. இதனை அடுத்து அப்போது நீதிபதிகள் , சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்து அதன் பிறகு தானே விசாரணை நடத்தியுள்ளது, உயர்நீதிமன்றம் தனது கருத்தை வெளிப்படுத்தியதில் தவறில்லை. ஒருவேளை உயர்நீதிமன்றம் இவ்விவகாரத்தை தவறாக கையாண்டு இருந்தால் அதை அரசியல் சாசன விதிப்படி உச்ச நீதிமன்றம் ரத்து செய்யும். ஆனால் உயர்நீதிமன்றம் அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்து உள்ளதாக கூறினர்.

madras high court,enforcement department ,சென்னை உயர் நீதிமன்றம்,அமலாக்கத்துறை


மேலும் அத்துடன் மருத்துவமனையில் உள்ளபோது மருத்துவர்கள் தெரிவித்த கருத்தின் அடிப்படையில் தான் உயர்நீதிமன்றம் விசாரணை நடத்த முடியும் எனவும், மருத்துவ சிகிச்சை முடிந்த பிறகு அவரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தலாமே? தற்போதைய நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் விசாரணை தொடர்வது தான் சரியாக இருக்கும் எனவும் கூறிய நீதிபதிகள் இந்த வழக்கை ஜூலை 4-2ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

இந்த நிலையில் செந்தில் பாலாஜி விவகாரத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனு மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெறுகிறது. செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு தொடர்பாகவும் விசாரணை நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது.

Tags :