Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கோவையில் உயர்மட்ட மேம்பாலங்கள் அமைப்பது தொடர்பாக அமைச்சர் தலைமையில் கருத்துக்கேட்பு

கோவையில் உயர்மட்ட மேம்பாலங்கள் அமைப்பது தொடர்பாக அமைச்சர் தலைமையில் கருத்துக்கேட்பு

By: Nagaraj Sat, 24 Dec 2022 9:26:47 PM

கோவையில் உயர்மட்ட மேம்பாலங்கள் அமைப்பது தொடர்பாக அமைச்சர் தலைமையில் கருத்துக்கேட்பு

கோவை: கோவையில் புதிய உயர்மட்ட மேம்பாலங்கள் அமைப்பது தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது.


கோவை மாவட்டத்தில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது இந்த நிலையில் ஏற்கனவே கோவை மாவட்டத்தில் கடந்த காலங்களில் பல்வேறு உயர் மட்ட மேம்பாலங்களும் புதியதாக இணைப்பு சானிகளும் அமைக்கப்பட்டது.

இதனால் போக்குவரத்து நெரிசல் ஓரளவுக்கு குறைந்தது இந்த நிலையில் அவினாசி சாலையில் 10 கிலோ மீட்டர் தொலைவிற்கு புதிதாக உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது தற்போது 70% நிறைவடைந்துள்ளது

minister,hearing,action,discussions,chief minister ,அமைச்சர், கருத்துக்கேட்பு, நடவடிக்கை, விவாதங்கள், முதல்வர்

கோவை மாநகரின் முக்கிய பகுதிகளாக விளங்கும் சாய்பாபா காலனி சிங்காநல்லூர் சரவணம்பட்டி ஆகிய பகுதிகளில் உயர்மட்ட மேம்பாலம் அமைப்பது தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று கருத்து கேட்பு கூட்டம் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்றது.

இந்த கருத்து கேட்பு கூட்டத்தில் அந்த பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் மற்றும் பொதுநல அமைப்பினர் அரசியல் கட்சியினர் என ஏராளமானோர் கலந்து கொண்டு எவ்வாறு பாலம் அமைப்பது எந்த பகுதியில் மேம்பாலம் தொடங்க வேண்டும் இதனால் எப்படி போக்குவரத்து குறைக்க முடியும் என்பது குறித்து பல்வேறு விவாதங்கள் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து இவை அனைத்தையும் கேட்டு அறிந்த அமைச்சர் செந்தில் பாலாஜி அந்த கருத்துக்கள் மற்றும் விவாதங்கள் அனைத்தையும் முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று இந்த பகுதியில் மேம்பாலம் அமைக்க தேவையான அனைத்து விதமான நடவடிக்கைகளையும் எடுப்பதாக தெரிவித்தார்

Tags :
|