Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியா முழுவதும் ட்ரெண்டிங் ஆகும் ஹார்ட் அட்டாக் ஹேஷ்டேக்

இந்தியா முழுவதும் ட்ரெண்டிங் ஆகும் ஹார்ட் அட்டாக் ஹேஷ்டேக்

By: Nagaraj Tue, 06 Dec 2022 5:44:09 PM

இந்தியா முழுவதும் ட்ரெண்டிங் ஆகும் ஹார்ட் அட்டாக் ஹேஷ்டேக்

புதுடில்லி: திடீர் மாரடைப்பு தொடர்பாக இந்தியா முழுவதும் ஹார்ட் அட்டாக் ஹேஷ்டேக் ட்ரெண்டிங் ஆகி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


உலகம் முழுவதும் வெகு காலமாகவே மாரடைப்பு பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது. முன்னதாக 40 வயதிற்கும் மேற்பட்டவர்களுக்கு மாரடைப்பு வரும் சம்பவங்கள் இருந்து வந்த நிலையில் தற்போது 25 வயது இளைஞர்கள் கூட மாரடைப்பால் இறக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. சமீபத்தில் திருமண வரவேற்பு ஒன்றில் நடனமாடி சென்ற இளம்பெண் மாரடைப்பால் இறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

heart attack,trending,twitter, ,
ட்ரெண்டிங், மாரடைப்பு, ஹேஷ்டேக், திடீர் மரணங்கள்

சமீப காலமாக இளைஞர்கள் திடீர் மாரடைப்பால் பலியாகும் சம்பவங்கள் உயர்ந்துள்ள நிலையில் இந்தியா முழுவதும் #heartattack என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி கொண்டு இருக்கிறது. இந்த ஹேஷ்டேகில் இடம் பெற்றுள்ள ஹார்ட் அட்டாக் உயிரழப்பு சம்பவங்கள் தொடர்பான வீடியோக்கள் அதிர்ச்சியை அளிக்கின்றன.

இவ்வாறு உள்ள நிலையில் இதுபோன்ற திடீர் மாரடைப்பு சம்பவங்களை தவிர்க்க வேண்டிய வழிமுறைகள், விழிப்புணரவையும் மருத்துவர்கள் பலர் பதிவிட்டு வருகின்றனர். கோவிட் பெருந்தொற்றுக்கு பின்னர் இப்படியான திடீர் மரணங்கள் உயர்ந்து வருவதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

Tags :