Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • முறைகேடாக கேரளாவுக்குள் நுழைவோருக்கு கடும் அபராதம் மற்றும் 28 நாள் கட்டாய தனிமை - பினராய் விஜயன் அறிவிப்பு

முறைகேடாக கேரளாவுக்குள் நுழைவோருக்கு கடும் அபராதம் மற்றும் 28 நாள் கட்டாய தனிமை - பினராய் விஜயன் அறிவிப்பு

By: Monisha Wed, 27 May 2020 3:14:52 PM

முறைகேடாக கேரளாவுக்குள் நுழைவோருக்கு கடும் அபராதம் மற்றும் 28 நாள் கட்டாய தனிமை - பினராய் விஜயன் அறிவிப்பு

வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வருவோரால், கேரளாவில் குறைந்திருந்த கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் இங்கு 67 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. தற்போது ஆஸ்பத்திரிகளில் 415 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இது தொடர்பாக கேரள முதல் மந்திரி பினராய் விஜயன் கூறியதாவது:- கேரளாவில் இருந்து வெளிநாடுகளில் தங்கி இருப்போரில் ஒரு லட்சத்து 34 ஆயிரம் பேர் கேரளா திரும்ப விருப்பம் தெரிவித்து முன் பதிவு செய்து உள்ளனர். அவர்கள் அனைவரையும் உடனடியாக இங்கு அழைத்து வரமுடியாது.

எனவே தான் பதிவு செய்தவர்களில் கர்ப்பிணிகள், நோயாளிகள் ஆகியோருக்கு முன்னுரிமை கொடுத்து அவர்களை முதலில் அழைத்து வருகிறோம். வெளிமாநிலங்களில் இருந்து கேரளா வந்தவர்களில் தமிழ்நாட்டில் இருந்த வந்த 71 பேருக்கும், மராட்டியத்தில் இருந்து வந்த 72 பேருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி ஆகி உள்ளது.

kerala,coronavirus,pinarayi vijayan,28 days compulsory privacy,reservation required ,கேரளா,கொரோனா வைரஸ்,பினராய் விஜயன்,28 நாள் கட்டாய தனிமை,முன்பதிவு அவசியம்

எனவே தான் வெளிமாநிலங்களில் இருந்து கேரளா வருவோர் கட்டாயமாக முன்பதிவு செய்து வரவேண்டும் என கூறியுள்ளோம். அதையும் மீறி சிலர் கேரள எல்லைகள் வழியாக முறைகேடாக கேரளாவுக்குள் நுழைகிறார்கள். இவ்வாறு நுழைவோர்களுக்கு கடும் அபராதம் விதிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும் அவர்களை 28 நாள் கட்டாய தனிமை முகாமில் தங்க வைக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

மாநிலம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ் 2 தேர்வுகள் தொடங்கி நடந்து வருகிறது. இத்தேர்வு எழுத வரும் மாணவ-மாணவிகளுக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. இத்தேர்வினை எழுத தவறிய மாணவ-மாணவிகள் கவலைப்பட வேண்டாம். அவர்களும் தேர்வு எழுத மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags :
|