Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று 4 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட்

தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று 4 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட்

By: vaithegi Fri, 28 Oct 2022 3:08:02 PM

தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று  4 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட்

சென்னை: இன்று 4 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட் .... தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று (அக்.28) விழுப்புரம்‌, காஞ்சிபுரம்‌, கடலூர்‌, செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதை தொடர்ந்து (அக்.29) தஞ்சாவூர்‌, கடலூர்‌, திருவாரூர்‌, தூத்துக்குடி ஆகிய பகுதிகளிலும்

மேலும் மயிலாடுதுறை, விழுப்புரம்‌, நாகப்பட்டினம்‌, புதுக்கோட்டை, இராமநாதபுரம்‌, தென்காசி, சிவகங்கை, தூத்துக்குடி, தேனி மற்றும்‌ புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

heavy rain,chennai ,கனமழை ,சென்னை

இதனை அடுத்து அடுத்தாக அக் .30ம் தேதி திருவாரூர்‌, விருதுநகர்‌நாகப்பட்டினம்‌, தஞ்சாவூர்‌,புதுக்கோட்டை, தூத்துக்குடி, சிவகங்கை, மதுரை, மயிலாடுதுறை, கன்னியாகுமரி, தேனி, திண்டுக்கல்‌, இராமநாதபுரம்‌, தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில்‌ கனமழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் புதுவையின் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும்.

இதையடுத்து சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேக மூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில பகுதிகளில்‌ லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்‌ என வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags :