Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கனமழை ..சென்னை விமான நிலையத்தில் இருந்து செல்லும் பல விமானங்கள் ரத்து

கனமழை ..சென்னை விமான நிலையத்தில் இருந்து செல்லும் பல விமானங்கள் ரத்து

By: vaithegi Thu, 30 Nov 2023 3:47:36 PM

கனமழை   ..சென்னை விமான நிலையத்தில் இருந்து செல்லும் பல விமானங்கள் ரத்து


சென்னை: தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்றுக்கு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவுகிறது. இதன் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து கொண்டு வருகிறது.

அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை வெளுத்து கொண்டு வருகிறது. எனவே இதன் காரணமாக சென்னையில் பல்வேறு பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. சுரங்க பாதைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் சில பகுதிகளில் வீடுகளிலும் தண்ணீர் சூழ்ந்துள்ளது. சென்னை மாநகராட்சி சார்பில் மழை தொடர்பான கட்டணமில்லா புகார் எண்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

airplanes,heavy rain ,விமானங்கள் ,கனமழை

இந்த நிலையில், கனமழை காரணமாக சென்னை விமான நிலையத்திலிருந்து செல்லும் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சென்னையில் இருந்து சேலம், ஆந்திரா, அபுதாபி, இலங்கை செல்லும் விமானங்கள் உள்பட மொத்தம் 8 விமானங்கள் கனமழை காரணமாக ரத்து செய்யப்பட்டு உள்ளன. இதேபோன்று சென்னையில் இருந்து அந்தமான், ஹைதராபாத், ஹூப்ளி, டெல்லி, மும்பை செல்லும் விமானங்கள் மழை காரணமாக தாமதமாகி உள்ளது.

Tags :