Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் இன்னும் 5 நாட்களுக்கு கனமழைதானாம்

தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் இன்னும் 5 நாட்களுக்கு கனமழைதானாம்

By: vaithegi Mon, 04 Sept 2023 1:34:07 PM

தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் இன்னும்  5 நாட்களுக்கு கனமழைதானாம்


சென்னை: வட தமிழகம் மற்றும் குமரிக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சியின் காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கடந்த 1 வாரமாகவே கன மழை பெய்து கொண்டு வருகிறது.

மேலும், ஒரு சில பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வந்தாலும் சென்னை, கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இயல்பான வெப்பநிலையை காட்டிலும் 3 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பம் உயர்ந்திருப்பதாக பொதுமக்கள் அசௌகரியம் தெரிவித்து உள்ளனர்.

tamil nadu,heavy rain ,தமிழகம் , கனமழை

இந்த நிலையில், தென்னிந்தியாவில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகிய தென் இந்தியாவில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதையடுத்து கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசும் என்பதால் மீனவர்கள் இந்த 5 நாட்களுக்கு கடலுக்குள் மீன் பிடிக்க செல்வதை தவிர்த்துக் கொள்ளுமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

Tags :