Advertisement

ஜப்பானில் பெய்துவரும் கனமழை காரணமாக 34 பேர் உயிரிழப்பு

By: Karunakaran Mon, 06 July 2020 09:38:27 AM

ஜப்பானில் பெய்துவரும் கனமழை காரணமாக 34 பேர் உயிரிழப்பு

ஜப்பான் நாட்டில் உள்ள யூஷூ தீவின் குமமோடோ மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையினால் அங்குள்ள குமா என்ற ஆற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளம் காரணமாக அங்குள்ள பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

கனமழை மற்றும் வெள்ளத்தால் பல்வேறு வீடுகளில் நீர் சூழ்ந்து விட்டதால் அங்குள்ள் மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். மேலும் நிலச்சரிவு காரணமாக பல இடங்களில் உள்ள கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. இதனால் தற்போது மீட்புப்படையினர் அங்குள்ள மக்களை மீட்டு வருகின்றனர்.

heavy rain,japan,34 dead,flood ,பலத்த மழை, ஜப்பான், 34 உயிரிழப்பு , வெள்ளம்

2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் மீட்கப்பட்டு, பல்வேறு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். தற்போது அந்த மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 34 பேர் உயிரிழந்துள்ளதுள்ளதாக அரசு தரப்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதில் 16 பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளனர். அவர்களது உடல்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து மீட்புப்படையினர் காணாமல் வெள்ளத்தினால் காணாமல் போனவர்களையும், இறந்தவர்களையும் தேடி வருகின்றனர்.

Tags :
|