Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ராமேஸ்வரத்தில் இன்று அதிகாலை 4 மணி முதல் 7 மணி வரை பலத்த மழை

ராமேஸ்வரத்தில் இன்று அதிகாலை 4 மணி முதல் 7 மணி வரை பலத்த மழை

By: vaithegi Thu, 28 July 2022 10:07:38 AM

ராமேஸ்வரத்தில் இன்று அதிகாலை 4 மணி முதல் 7 மணி வரை  பலத்த மழை

ராமேஸ்வரம்: தமிழகத்தில் வளிமண்டலம் மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் நல்ல மழை பெய்து கொண்டு வருகின்றது.

இதனிடையே ராமேஸ்வரம் பகுதியில் இன்று அதிகாலை 4 மணி முதல் 7 மணி வரையிலும் 3 மணி நேரத்திற்கு மேலாக தொடர்ச்சியாக இடைவிடாமல் மிக பலத்த மழை பெய்தது.

heavy rain,rameswaram ,பலத்த மழை,ராமேஸ்வரம்

இந்த பலத்த மழையால் கோவில் பேருந்து நிலையம் செல்லும் ராம தீர்த்த முதல் சீதா தீர்த்தம் திட்டக்குடி வரையிலான தேசிய நெடுஞ்சாலை முழுவதும் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.

மேலும் நகரின் தாழ்வான பல இடங்களிலும் மழை நீர் தேங்கி நின்றது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனா்.

Tags :