Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு கனமழை

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு கனமழை

By: vaithegi Wed, 03 Aug 2022 3:50:45 PM

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு கனமழை

சென்னை: தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் அதி கனமழை பெய்து கொண்டு வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து கொண்டு வருகிறது. இதனால், கனமழை எச்சரிக்கையாக கன்னியாகுமரி மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 4 தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) குழுக்களை மாநில அரசு அனுப்பியுள்ளது.

இந்த நிலையில், தேனி, திண்டுக்கல், திருப்பூர் மற்றும் கோவை போற மாவட்டங்களுக்கு வரும் வெள்ளிக்கிழமை வரைக்கும் கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.மேலும் அதே போல, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

heavy rain,monsoon ,கனமழை ,பருவமழை

மேலும், நீலகிரி, ஈரோடு, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி வரைக்கும் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னையை பொறுத்த வரைக்கும் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை அடுத்து சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு அதிகபட்சமாக 33 முதல் 34 டிகிரி செல்ஸியஸ் வரைக்கும் வெயில் இருக்கும் எனவும், குறைந்தபட்சமாக வெப்பநிலை 26 முதல் 27 என்கிற அளவில் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழ்நாடு கடற்கரை பகுதிகள், வங்காள விரிகுடா பகுதி மற்றும் இலங்கை கடற்கரை பகுதிகளில் மணிக்கு 50-60 கிமீ வேகத்தில் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :