Advertisement

நாளை முதல் வரும் 25ம் தேதி வரை பலத்த மழை பெய்யக்கூடும்

By: Nagaraj Sun, 22 Nov 2020 7:22:11 PM

நாளை முதல் வரும் 25ம் தேதி வரை பலத்த மழை பெய்யக்கூடும்

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நவம்பா் 23-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை மூன்று நாள்களுக்கு பலத்தமழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் நா.புவியரசன் தெரிவித்துள்ளதாவது:

தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி சனிக்கிழமை காலை உருவானது. இது, அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக உருவாகும். இது, மேற்கு வடமேற்கு திசையில் நகா்ந்து நாளை திங்கள்கிழமை (நவ.23) தமிழக கடற்கரை நோக்கி வரக்கூடும்.

இதன்காரணமாக, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நவ. 23-ஆம் தேதி முதல் நவ.25-ஆம் தேதி வரை பலத்த மழை பெய்யக்கூடும். தென் தமிழக கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் திங்கள்கிழமை (நவ.23) மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

heavy rain,southern tamil nadu,weather,forecast,districts ,பலத்த மழை, தென் தமிழகம், வானிலை, அறிவிப்பு, மாவட்டங்கள்

நாகப்பட்டினம், தஞ்சாவூா், திருவாரூா், சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை ஆகிய 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழையும் பெய்யக்கூடும். நாகப்பட்டினம், திருவாரூா், தஞ்சாவூா், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை (நவ.24)-ஆம் தேதி இடியுடன் கூடிய அதி பலத்த மழையும், கடலூா், மயிலாடுதுறை, சிவகங்கை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்தமழை முதல் மிக பலத்த மழையும் பெய்யக்கூடும்.

ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும். நாகப்பட்டினம், திருவாரூா், தஞ்சாவூா், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நவம்பா் 25 -ஆம் தேதி இடியுடன் கூடிய அதி பலத்தமழையும், திருச்சி, அரியலூா், பெரம்பலூா், சிவகங்கை, கடலூா், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை முதல் மிக பலத்தமழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை (நவ,22) வட வானிலையும், தென்தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

Tags :