Advertisement

இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல்

By: vaithegi Tue, 31 Oct 2023 10:09:32 AM

இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல்

சென்னை: 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு .....இலங்கை மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

எனவே இதன் காரணமாக நேற்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியது.

namalay meteorological research centre ,னமழை,வானிலை ஆய்வு மையம்

அதேபோன்று நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, தென்காசி, திருநெல்வேலி, குமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் தென்காசி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

Tags :