Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இன்று தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை கட்டாயம் வெளுத்து வாங்கும்

இன்று தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை கட்டாயம் வெளுத்து வாங்கும்

By: vaithegi Tue, 10 Oct 2023 3:04:22 PM

இன்று தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை கட்டாயம் வெளுத்து வாங்கும்

சென்னை:15 மாவட்டங்களில் கனமழை ..... தமிழகத்தை பொறுத்தவரை கடந்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் மட்டுமே மழை பெய்து உள்ளது. இதில் அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 39 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதிலும் குறிப்பாக குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக,

இன்று மற்றும் நாளை கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி , வேலூர், சேலம், திருப்பூர், திருச்சி, நாமக்கல், திண்டுக்கல், கரூர், மதுரை மற்றும் தேனி ஆகிய 15 மாவட்டங்களில் கன மழை பெய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

heavy rain,lower atmospheric circulation ,கனமழை , வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி

மேலும் அக்டோபர் 12 முதல் 16ஆம் தேதி வரை மிதமான வானிலை நிலவும் எனவும், தமிழகத்தின் தலைநகரான சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும்தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து அரபிக்கடல் பகுதிகளில் லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே மீனவர்கள் இன்று இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்த பட்டுள்ளார்கள்.

Tags :