Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஐந்து நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளது... வானிலை ஆய்வு மையம் தகவல்

ஐந்து நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளது... வானிலை ஆய்வு மையம் தகவல்

By: Nagaraj Sat, 19 Nov 2022 1:02:26 PM

ஐந்து நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளது... வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு... தமிழகத்தில் இன்று முதல் ஐந்து தினங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில்,” தென்கிழக்கு கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்பொழுது வலு பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தெற்கு வங்க கடலின் மத்திய பகுதிகளில் நிலை கொண்டுள்ளது.

heavy rain,chance,tamil nadu,northern districts,coastal,a couple of places ,
கனமழை, வாய்ப்பு, தமிழகம், வடமாவட்டங்கள், கடலோரம், ஓரிரு இடங்கள்

இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறும். அதனைத் தொடர்ந்து மூன்று தினங்களுக்குள் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து புதுச்சேரி, தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திரா, கடலூர் பகுதிகளை ஒட்டி வரக்கூடும்.

இதன் காரணமாக இன்று முதல் வரும் 23ஆம் தேதி வரை தமிழகத்தில் கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. இன்றும் நாளையும் தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் கன முதல் மிக கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது” என்று தெரிவித்துள்ளது.

Tags :
|