Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இன்று இங்கு கனமழைக்கு வாய்ப்பு .. வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பு

இன்று இங்கு கனமழைக்கு வாய்ப்பு .. வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பு

By: vaithegi Fri, 15 Sept 2023 3:28:55 PM

இன்று இங்கு கனமழைக்கு வாய்ப்பு .. வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பு

சென்னை: கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழை .. நேற்று (14.09.2023) காலை வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு ஒரிசா - மேற்கு வங்காள பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை இழக்கு மத்திய பிரதேசம் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 3-4 தினங்களில் மேற்கு திசையில் நகரக்கூடும்.

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

meteorological center,heavy rain ,வானிலை ஆய்வு மையம் ,கனமழை


இதனை அடுத்து கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.நாளை மற்றும் 17.09.2023. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.மேலும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஓட்டியும் இருக்கக்கூடும்.

Tags :