Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

By: vaithegi Sun, 21 May 2023 11:07:32 AM

தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்கள் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகப் பகுதிகளின் மேல் வளிமண்டலத்தில் கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாகவும், வெப்பச் சலனம் காரணமாகவும் இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

heavy rain,tamil nadu,puducherry , கனமழை,தமிழ்நாடு, புதுச்சேரி

மேற்குத் தொடர்ச்சி மலை யோரப் பகுதிகளான நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர் போன்ற 12 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வருகிற 22, 23, 24-ம் தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் ஓரிரு இடங்களில், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ளது.

மேலும் தமிழகத்தில் சில இடங்களில் இன்றும் அதிகபட்ச வெப்பநிலை 104 டிகிரி ஃபாரன்ஹீட் அளவில் இருக்கக் கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 102 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 83 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கும்.

Tags :