Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வளிமண்டல கீழடுக்கு சுழற்‌சி காரணமாக இன்று 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

வளிமண்டல கீழடுக்கு சுழற்‌சி காரணமாக இன்று 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

By: vaithegi Wed, 07 Sept 2022 4:26:34 PM

வளிமண்டல கீழடுக்கு சுழற்‌சி காரணமாக இன்று 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: வட தமிழக பகுதிகளை ஒட்டி நிலவும்‌ வளிமண்டல கீழடுக்கு சுழற்‌சி காரணமாக, 07.09.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒருசில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌, தேனி, திண்டுக்கல்‌, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம்‌, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர்‌, ராணிப்பேட்டை, திருப்பத்தூர்‌, காஞ்சிபுரம்‌, கடலூர்‌, விழுப்புரம்‌ மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுச்சேரி ஆகிய பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தேர்வித்துள்ளது.

08.09.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒருசில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. இதை அடுத்து 09.09.2022 முதல்‌ 11.09.2022 வரை: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

heavy rain,tamil nadu,puduvai,karaikal,meteorological centre ,கனமழை,தமிழ்நாடு, புதுவை ,காரைக்கால்‌ ,வானிலை மையம்

மேலும் சென்னையை பொறுத்தவரை:அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒருசில பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது/மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பறிலை 26-27 டிகிரி செல்சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌.

அடுத்த 48 மணி நேரத்துற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒருசில பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது/மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌ என அறிவித்துள்ளது.

Tags :