Advertisement

இன்று 18 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்

By: vaithegi Sun, 07 May 2023 3:49:26 PM

இன்று 18 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளதாவது: -தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக அந்த பகுதிகளில் வருகிற 8-ம் தேதி வாக்கில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது வருகிற 9-ஆம் தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடக்கு திசையில் நகர்ந்து மத்திய வங்கக்கடல் மற்றும் வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் புயலாக வலுபெறக்கூடும்.

heavy rain,chennai meteorological centre ,கனமழை ,சென்னை வானிலை ஆய்வு மையம்

இதையடுத்து இதன் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், சேலம், கள்ளக்குறிச்சி, ஈரோடு. நீலகிரி, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களிலும்

மேலும் நாமக்கல், திருச்சிராப்பள்ளி, பெரம்பதார், அரியலூார், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :