Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழ்நாட்டில் 22 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் 22 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

By: vaithegi Tue, 01 Nov 2022 1:30:52 PM

தமிழ்நாட்டில் 22 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: இன்று கனமழைக்கு வாய்ப்பு ... வட இலங்கை கடற்கரை பகுதிகளை ஒட்டி இருக்கும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகின்ற வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சியின் காரணமாக இன்று முதல் வரும் 4-ம் தேதி வரைக்கும் தமிழகத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.

அந்த வகையில் காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய எட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்றும், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம் ,திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி

heavy rain,chennai ,கனமழை,சென்னை

இதையடுத்து கடலூர், பெரம்பலூர், அரியலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் ,மயிலாடுதுறை, நாமக்கல், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கன மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என வானிலை மையம் அறிவித்திருக்கிறது.

மேலும் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் எனவும், நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags :