Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவிப்பு

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவிப்பு

By: vaithegi Sat, 06 Aug 2022 2:59:55 PM

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது என  சென்னை வானிலை மையம் தெரிவிப்பு

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்கு திசைக்காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, திண்டுக்கல், தென்காசி, தேனி, வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மேலும் நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் நாளை கன்னியாகுமரி, திருநெல்வேலி, திண்டுக்கல், தென்காசி, தேனி, வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து 08.08.2022: கன்னியாகுமரி, திருநெல்வேலி, திண்டுக்கல், தென்காசி, தேனி, வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 09.08.2022, 10.08.2022: கன்னியாகுமரி, திருநெல்வேலி, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

chennai meteorological center,heavy rain ,சென்னை வானிலை மையம்,கனமழை

இதை அடுத்து சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

மேலும் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் எனவும் தகவல் சென்னை வானிலை தகவல் மையம் தெரிவித்துள்ளது.

Tags :