Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இன்று 6 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு .. வானிலை ஆய்வு மையம் தகவல்

இன்று 6 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு .. வானிலை ஆய்வு மையம் தகவல்

By: vaithegi Tue, 06 Sept 2022 4:14:46 PM

இன்று 6 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு  ..   வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை : சென்னை வானிலை மையம் இன்றைய வானிலை நிலவரம் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழக பகுதியில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்றும் நாளையும் தமிழகம், புதுச்சேரி பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது..

அத்துடன் தமிழகத்தில் குறிப்பாக கோவை, நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் ஈரோடு, மதுரை, கரூர், திருச்சி, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் நாளை நீலகிரி, கோவை, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 6 மாவட்டத்திலும் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

met office,very heavy rain ,வானிலை ஆய்வு மையம்,மிக கனமழை

இதை தொடர்ந்து நாளை மறுநாள் நீலகிரி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்யக்கூடும். சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.

இதனையடுத்து குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா, அதையொட்டிய தென் தமிழக கடலோரப் பகுதிகள், இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்றும் நாளையும் மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்தில் காற்று வீசுவதால் மீனவர்கள் இந்த பகுதிக்கு செல்லும் போது எச்சரிக்கையுடன் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Tags :