Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கோவை, நீலகிரி, சேலம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு

கோவை, நீலகிரி, சேலம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு

By: vaithegi Mon, 05 June 2023 09:59:23 AM

கோவை, நீலகிரி, சேலம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னை 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு ... சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட அறிவிப்பில், தென்னிந்தியப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக குறிப்பிட்டு உள்ளார்.

எனவே இதன் காரணமாகவும், வெப்பச் சலனம் காரணமாகவும் தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்று (ஜூன் 5) சில இடங்களிலும், நாளை ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்து உள்ளார்.

heavy rains,coimbatore,nilgiris,salem ,கனமழை , கோவை, நீலகிரி, சேலம்

அதன்படி இன்று நீலகிரி,கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம் ஆகிய 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறி உள்ளார். ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2, 3 டிகிரி கூடுதலாக பதிவாகி 106 டிகிரி ஃபாரன்ஹீட் அளவில் இருக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து வருகிற 7 மற்றும் 8-ம் தேதிகளிலும் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும் என கூறப்பட்டுள்ளது.

மேலும் அதிகபட்ச வெப்பநிலை 104 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 86 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டியிருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Tags :