Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு

திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு

By: vaithegi Fri, 07 Oct 2022 1:53:30 PM

திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னை: இன்று கனமழைக்கு வாய்ப்பு ..... தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதையடுத்து இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

heavy rain,thiruvallur,kanchipuram ,கனமழை , திருவள்ளூர், காஞ்சிபுரம்

மேலும் திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.a

Tags :