Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு

By: vaithegi Mon, 05 Sept 2022 5:45:59 PM

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னை: தமிழக பகுதிகளில் மேல்‌ நிலவும்‌ வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி 05.09.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில் அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, ஈரோடு, கோயம்புத்தூர்‌, திருப்பூர், தேனி, திருச்சி , மதுரை, கரூர்‌, திருச்சி, நாமக்கல்‌, சேலம்‌, தர்மபுரி, வேலூர்‌, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, தென்காசி, திருநெல்வேலி மற்றும்‌ கன்னியாகுமாரி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

06.09.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில் அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோயம்புத்தூர்‌, தென்காசி, நெல்லை, கன்னியாகுமாரி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கன முதல்‌ மிக கனமழையும்‌, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல்‌, மதுரை, கரூர்‌, திருச்சி, நாமக்கல்‌, சேலம்‌, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர்‌, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மற்றும்‌ கள்ளக்குறிச்சி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழையும்‌ பெய்ய வாய்ப்புள்ளது.

heavy rain,lower atmospheric circulation ,கனமழை ,வளிமண்டல கீழடுக்கு சுழற்சி

இதை அடுத்து 07.09.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில் அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோயம்புத்தூர்‌, திருப்பத்தூர், வேலூர்‌, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கன முதல்‌ மிக கனமழையும்‌, ஈரோடு, திருப்பூர்‌, தேனி, திண்டுக்கல், மதுரை, கரூர்‌, திருச்சி, நாமக்கல்‌, சேலம்‌, தர்மபுரி, ராணிப்பேட்டை, தென்காசி, நெல்லை மற்றும்‌ கன்னியாகுமரி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழையும்‌ பெய்ய வாய்ப்புள்ளது.

08.09.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோயம்புத்தூர்‌, ஈரோடு, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர்‌, ராணிப்பேட்டை மற்றும்‌ திருவண்ணாமலை மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் 09.09.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

Tags :