Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 4 நாள்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 4 நாள்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

By: vaithegi Thu, 13 Oct 2022 2:35:16 PM

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 4 நாள்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குமரிக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று (13.10.2022) நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவித்துள்ளது.

இதனை அடுத்து (14.10.2022) நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

heavy rain,chennai ,கனமழை,சென்னை

15.10.2022 நாளை மறுநாள் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் வட உள் தமிழக மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என அறிவித்துள்ளது.

மேலும் (16.10.2022 முதல் 17.10.2022) வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது

Tags :