Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வருகிற 1,2-ம் தேதி இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

வருகிற 1,2-ம் தேதி இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

By: vaithegi Mon, 30 Jan 2023 09:49:18 AM

வருகிற 1,2-ம் தேதி இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: வருகிற 1,2-ம் தேதி கனமழை பெய்யக்கூடும் .... நேற்று முன்தினம் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் பூமத்தியரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே பகுதிகளில் நீடிக்கிறது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வலுவடைந்து 01.02.2023 அன்று இலங்கை கடற்பகுதிகளை சென்றடையக்கூடும்.

எனவே இதன் காரணமாக இன்று தமிழக கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான / மிதமான மழை பெய்யக்கூடும்.நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசான / மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

heavy rains,tamil nadu,puducherry,karaikal ,கனமழை, தமிழ்நாடு, புதுச்சேரி ,காரைக்கால்

இதையடுத்து 1-ம் தேதி தென்தமிழக மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வடதமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும் இடிமின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என அறிவித்துள்ளது.

அதைத்தொடர்ந்து 2-ம் தேதி தென்தமிழக மாவட்டங்களில் அநேக இடங்களிலும் வடதமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும் இடிமின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்துள்ளது.a

Tags :