Advertisement

இன்று இந்த மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

By: vaithegi Wed, 07 June 2023 2:34:57 PM

இன்று இந்த மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னை: 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் எச்சரிக்கை .... வெப்பசலனம் காரணமாக தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது.

எனவே அதன்படி, தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர்,கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி, நாமக்கல், திருச்சிராப்பள்ளி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

heavy rain,heat,chennai meteorological centre ,கனமழை ,வெப்பசலனம் , சென்னை வானிலை ஆய்வு மையம்

இதனை அடுத்து தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது.

மேலும் இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி முதல் 40 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் எனவும் அறிவித்துள்ளது.

Tags :
|