Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இன்று இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு .. வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பு

இன்று இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு .. வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பு

By: vaithegi Sun, 28 May 2023 4:31:02 PM

இன்று இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு .. வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பு

சென்னை : சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் குறிப்பிட்டப்பட்டுள்ளதாவது: தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

இதனை அடுத்து நீலகிரி, கோயம்புத்தூர், சேலம், நாமக்கல். திருச்சிராப்பள்ளி மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வருகிற 30.05.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ளது.

meteorological centre,karaikal,puducherry,tamil nadu ,வானிலை ஆய்வு மையம், தமிழ்நாடு, புதுச்சேரி ,காரைக்கால்


மேலும் 31.05.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

அதைத்தொடர்ந்து வருகிற 01.06.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிய இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags :