Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் .. வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் .. வானிலை ஆய்வு மையம்

By: vaithegi Sun, 30 Apr 2023 2:40:29 PM

தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் ..   வானிலை ஆய்வு மையம்

சென்னை: தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும். மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக. இன்று நிலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி. தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதேபோல் நாளை இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும். சேலம், தர்மபுரி, நீலகிரி, ஈரோடு, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களிலும்

meteorological center,heavy rain ,வானிலை ஆய்வு மையம் ,கனமழை

இதனை அடுத்து தென்காசி, திருப்பூர். நாமக்கல், கரூர், கள்ளக்குறிச்சி, திருவள்ளவர். காஞ்சிபுரம். விழுப்புரம், பெரம்பலூர் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை : வருகிற 30.04.2023: குமரிக்கடல் பகுதிகள், கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் லட்சத்தீவு - மாலத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று
அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Tags :