Advertisement

தமிழகத்தில் அடுத்த 2 நாட்கள் கனமழை பெய்யக்கூடும்

By: vaithegi Wed, 01 Feb 2023 2:18:39 PM

தமிழகத்தில் அடுத்த 2 நாட்கள் கனமழை பெய்யக்கூடும்

சென்னை: அடுத்த 2 நாட்கள் கனமழை .... வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழு மண்டலம் இன்று (01-02-2023) 08.30 மணி அளவில் தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இலங்கை-திரிகோணமலையில் இருந்து கிழக்கு- தென் கிழக்கே சுமார் 160 கிலோ மீட்டர் தொலைவிலும், காரைக்காலில் இருந்து தென் கிழக்கே சுமார் 420 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

இதனை அடுத்து இது மெதுவாக மேற்கு-தென் மேற்கு திசையில் நகர்ந்து இன்று மாலை இலங்கை கடற்கரை பகுதிகளை கடக்கக்கூடும்.எனவே இதன் காரணமாக, 01-02-2023:- தமிழ்நாடு கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள் தமிழ்நாடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

heavy rains,coastal districts of tamil nadu,puducherry,karaikal ,கனமழை ,தமிழ்நாடு கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி ,காரைக்கால்

அதைத்தொடர்ந்து கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பக்குதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என அறிவித்துள்ளது.

02-02-2023:- தென் தமிழ்நாடு மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வடதமிழ்நாடு மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

Tags :