Advertisement

நாளை இந்த 7 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்

By: vaithegi Sun, 20 Aug 2023 4:27:52 PM

நாளை இந்த 7 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்

சென்னை: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 20.08.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு ஈழற்சி காரணமாக,

நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், கடலூர், நிலகிரி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

kanamalai,thanjavur,tiruvarur,nagapattinam,mayiladuthurai,ariyalur,cuddalore,nilagiri ,கனமழை ,தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், கடலூர், நிலகிரி

இதனையடுத்து வருகிற 22.08.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல். மதுரை, சிவகங்கை,

மேலும் புதுக்கோட்டை தஞ்சாவூர், திருவாரூர். நாகப்பட்டினம், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்பு உள்ளது.

Tags :