Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கேரளாவில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு

கேரளாவில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு

By: vaithegi Wed, 07 June 2023 3:44:20 PM

கேரளாவில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு

கேரளா: பிபோர்ஜாய் புயல் காரணமாக கேரளாவில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய, வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், தமிழ்நாடு மற்றும் புதுவையில் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக வலுப்பெற்றது. இந்த நிலையில், புயலாக வலுப்பெற்ற ‘பிபோர்ஜோய்’ புயல் வடக்கு நோக்கி நகர்ந்து அரபிக்கடலில் தீவிர புயலாக வலுவடைந்தது.

heavy rain,kerala ,கனமழை ,கேரளா

இதையடுத்து தற்போது, தீவிர புயலாக வலுவடைந்த ‘பிபோர்ஜோய்’ புயல் கோவாவில் இருந்து மேற்கு தென்மேற்கு திசையில் 890 கிலோ மீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் அதிதீவிர புயலாக வலுப்பெற கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புயலாக வலுப்பெற்ற ‘பிபோர்ஜோய்’ புயல் வடக்கு நோக்கி நகர்ந்து அரபிக்கடலில் தீவிரமடைந்தால், தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவிக்கின்றனர்.

Tags :