Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இன்று நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் அதிகனமழை பெய்ய வாய்ப்பு

இன்று நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் அதிகனமழை பெய்ய வாய்ப்பு

By: vaithegi Tue, 12 Sept 2023 3:15:16 PM

இன்று நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் அதிகனமழை பெய்ய வாய்ப்பு


சென்னை: நீலகிரி, கோயம்புத்தூரில் இன்று அதிகனமழை பெய்யக்கூடும் ... மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கடந்த 1 வாரத்திற்கும் மேலாக மழை பெய்து கொண்டு வருகிறது. அதே போன்று, இன்றும் நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்து உள்ளது. மேலும், தமிழகத்திலேயே அதிகபட்ச வெப்பநிலையாக தூத்துக்குடியில் 38 டிகிரி செல்ஸியஸ் வெப்பம் பதிவாகி உள்ளது.

இதனையடுத்து, கடலூர், கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் வழக்கத்தை காட்டிலும் 5டிகிரி அளவுக்கு வெப்பம் அதிகரித்து உள்ளதாக வானிலை அறிக்கை தெரிவித்துள்ளது. மேலும், இந்த கனமழை செப்.18ம் தேதி வரை நீடிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

heavy rain,nilgiris,coimbatore ,அதிகனமழை , நீலகிரி ,கோயம்புத்தூர்

சென்னையை பொறுத்த வரையிலும் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேக, மூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் பல்வேறு பகுதிகளில் லேசான முதல் மிதமான மழைப்பொழிவு இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்ததாக, ஆந்திர கடலோர பகுதி, மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதி மற்றும் இலங்கை கடலோர பகுதிகளில் சூறாவளிக் காற்று அதிவேகமாக வீசும் என்பதால் இன்று கடலுக்குள் மீனவர்கள் மீன் பிடிக்க செல்வதை தவிர்க்கும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :