Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு

மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு

By: vaithegi Thu, 07 Sept 2023 11:07:09 AM

மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு


சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட உள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கபட்டுள்ளதாவது :-தமிழகத்தில் மேற்கு திசைக் காற்றில் நிலவும் வேக மாறுபாடு காரணமாக

தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்று முதல் வரும் 12-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இதனை அடுத்து இன்று கோவை, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப் பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி மாவட்டங்களிலும், நாளை நீலகிரி, திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களிலும் கனமழை பெய்யும்.

heavy rains and hilly districts of the western ghats ,கனமழை,மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்கள்

சென்னை, புறநகர்ப் பகுதிகளில்அதிகபட்ச வெப்பநிலை 95 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 79 டிகிரிஃபாரன்ஹீட் அளவு இருக்கும் என அதிக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் வரும் 7, 8, 9-ம் தேதிகளில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.

Tags :