Advertisement

இன்று இந்த மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடுமாம்

By: vaithegi Tue, 07 Nov 2023 09:37:54 AM

இன்று இந்த மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடுமாம்

சென்னை:இன்று 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு...தென் இந்தியப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. கேரள கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

எனவே இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ளது வானிலை மையம்.

kanamalai,nilgiris,erode,krishnagiri,dharmapuri,tirupattur,salem,namakkal,tiruppur,karur,theni,dindigul,madurai,thenkasi,tirunelveli and kanyakumari. ,கனமழை , நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், நாமக்கல், திருப்பூர், கரூர், தேனி, திண்டுக்கல், மதுரை, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி

அந்த வகையில் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், நாமக்கல், திருப்பூர், கரூர், தேனி, திண்டுக்கல், மதுரை, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதனை அடுத்து இன்று முதல் நவ.9 வரை கேரளா மற்றும் மாஹே பகுதிகளில் கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.

Tags :
|
|
|
|