Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வருகிற 18 ,19 -ம் தேதிகளில் இந்த இடங்களில் கனமழை பெய்யக்கூடும்

வருகிற 18 ,19 -ம் தேதிகளில் இந்த இடங்களில் கனமழை பெய்யக்கூடும்

By: vaithegi Thu, 15 June 2023 2:46:49 PM

வருகிற 18 ,19 -ம் தேதிகளில் இந்த இடங்களில் கனமழை பெய்யக்கூடும்

சென்னை: மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக, இன்று மற்றும் நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிசு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.17.06.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதனை அடுத்து வருகிற 18.06.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர். இராணிப்பேட்டை காஞ்சிபுரம். திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை. கள்ளக்குறிச்சி, சேலம், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், கடலூர், மயிலாடுதுறை மற்றும் அரியலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

heavy rain,tamil nadu,puducherry,karaikal ,கனமழை ,தமிழ்நாடு, புதுச்சேரி ,காரைக்கால்

மேலும் வருகிற 19.06.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர். இராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என அறிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 41 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும் எனவும் வானிலை மையும் தெரிவித்துள்ளது.

Tags :